என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் வாலிபர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை
    X

    கைது செய்யப்பட்ட முகமது இலியாஸ்.

    திருப்பூரில் வாலிபர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை

    • முகமது இலியாஸ், ரபிக் நண்பர்களான இருவரும் மது அருந்துவது வழக்கம்.
    • ரபிக் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    திருப்பூர்

    திருப்பூர் காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ரபிக் (28). பனியன் நிறுவனத்தின் டெய்லராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தையும் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ் (29) நண்பர்களான இருவரும் மது அருந்துவது வழக்கம். அதேபோல் நேற்று இரவு திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் அருகே இருவரும் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.

    அப்போது ரபிக் தனது நண்பன் முகமது இலியாஸின் மனைவியை தவறாக பேசியதாக தெரிகிறது. இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முகமது இலியாஸ் தான் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து ரபிக் தலையில் பயங்கரமாக அடித்தார். மேலும் உடைந்த பாட்டிலை கொண்டு கழுத்து வயிறு உள்ளிட இடங்களில் சரம்மாரியாக குத்தினார்.இதில் பலத்த காயம் அடைந்த ரபிக் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த போது அங்கிருந்து முகமது இலியாஸ் தப்பி ஓடி விட்டார். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தலை மறைவாக இருந்த முகமது இலியாசை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். தனிப்படை போலீசார் இன்று அதிகாலை வெளியூர் தப்பிச் செல்ல முயன்ற முகமது இலியாசை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. திருப்பூரில் நண்பனை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×