என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    வடுகபாளையம் மாகாளியம்மன், கரடிவாவி மாரியம்மன், ராசாகவுண்டம்பாளையம் மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி. 

    பல்லடம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு அன்னதானம், மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பல்லடம் வட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதன்படி, பல்லடம் வடுகபாளையம் மாகாளியம்மன் கோவிலில், தாமரைப் பூக்களால் மாகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், கரடிவாவி மாரியம்மன் கோவில், பல்லடம் அங்காளம்மன் கோவில், ராசாகவுண்டம்பாளையம் மாகாளியம்மன் கோவில், மற்றும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×