search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை விடுமுறையையொட்டி திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
    X

    கோப்புபடம்.

    கோடை விடுமுறையையொட்டி திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்

    • ரெயில் பயணிகள் பயணிக்க ஏதுவாக 3 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    • ஏப்ரல் 26 முதல் ஜூன் 28 வரை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    கோடை விடுமுறையை முன்னிட்டு ெரயில் பயணிகள் பயணிக்க ஏதுவாக 3 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு :- ஜூன் 27 வரை (செவ்வாய்தோறும்) சென்னை தாம்பரம் - மங்களூரு சிறப்பு ரெயில் (06031). மறுமார்க்கமாக ஏப்ரல் 26 முதல் ஜூன் 28 வரை (புதன்தோறும்) மங்களூரு - சென்னை தாம்பரம் சிறப்பு ரெயில், மே 3 முதல் ஜூன் 28 வரை (புதன்தோறும்) திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் சிறப்பு ெரயில் (06044) மே 4 முதல் ஜூன் 29 வரை (வியாழன் தோறும்) சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (06043) இயக்கப்படுகிறது.

    மேற்கண்ட 2 ரெயில்களும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.கொச்சுவேலி - பெங்களூரு சிறப்பு ரெயில் ஜூன் 27 வரை செவ்வாய்கிழமைகளில் இயங்கும். மறுமார்க்கமாக புதன்தோறும் பெங்களூரு - கொச்சுவேலி ஏப்ரல் 26 முதல் ஜூன் 28 வரை சிறப்பு ரெயில் இயங்கும். இந்த ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர் வழியாக இயக்கப்படும். மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

    கோவை - நாகர்கோவில் இடையே இயக்கப்பட்ட ரெயிலில் துாத்துக்குடிக்கென இரு பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தது. வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்தில் பெட்டிகள் தனியே கழற்றப்பட்டு, தூத்துக்குடிக்கு வேறு என்ஜின் மூலம் இயக்கப்பட்டது. கொரோனா காரணமாக, ரெயில் இயக்கம் நிறுத்தப்பட்ட போது இச்சேவையும் திரும்ப பெறப்பட்டது.

    கடந்த 3 ஆண்டுகளாக தூத்துக்குடிக்கு ரெயில் இல்லை. கோவை, திருப்பூரில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டுமெனில் ஈரோடு சென்று அங்கிருந்து வேறு ரெயிலில் செல்ல வேண்டியுள்ளது.

    இது குறித்து ரெயில் பயணிகள் கூறுகையில், 'கோவையில் இருந்து வடமாநிலங்களுக்கு கோடை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. தூத்துக்குடி ரெயில் இயக்கம் இல்லாததால், ஈரோடு சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டியுள்ளது. ஈரோடு வழியாக இயக்கப்படும் தினசரி ரெயில் மைசூரில் இருந்து வருவதால், எப்போதும் கூட்டமாக உள்ளது. முன்பதிவில் இடம் கிடைப்பதில்லை. எனவே பயணிகள் வசதிக்காக, கோவை - தூத்துக்குடி இடையே கோடை சிறப்பு ெரயில் அறிவிக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×