என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
உணவு பாதுகாப்பு உரிமம் பெற சிறப்பு முகாம்
- உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நடைபெற்றது.
- 48 பேர் கலந்து கொண்டு சான்றிதழ்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கினர்.
காங்கயம்
காங்கயம் வட்டாரப் பகுதி உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் உணவுப் பொருள் வணிகம் செய்வோருக்கு உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள மளிகைக்கடைகள், டீ கடைகள், உணவகம், பேக்கரி, காய்கறி கடைகள், எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் மட்டன், சிக்கன் கடை நடத்துபவர்கள் உரிமம் பதிவு பெற்றுக்கொண்டு பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து காங்கயம் பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் காங்கயம் பகுதியைச் சேர்ந்த 48 பேர் கலந்து கொண்டு சான்றிதழ்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கினர்.
விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு இவர்களுக்கு விரைவில் சான்றிதழ் வழங்கப்படும் என காங்கயம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் கோடீஸ்வரன் தெரிவித்தார்.






