என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பல்லடம் அருகே தாயை தாக்கிய மகன் கைது
- சம்பவத்தன்று மனைவி சுகன்யா உடன் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
- தடுமாறி விழுந்த தனலட்சுமிக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த நமச்சிவாயம் மகன் முருகேசன் (வயது 33) .இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மனைவி சுகன்யா உடன் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுகன்யாவை முருகேசன் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை தடுக்கச் சென்ற முருகேசனின் தாயார் தனலட்சுமி (வயது 70) யையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தடுமாறி விழுந்த தனலட்சுமிக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார், முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






