என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
முத்தூரில் ரூ.2.92 லட்சத்திற்கு கொப்பரை, தேங்காய் விற்பனை
- முத்தூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தினசரி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
- ரூ.2.92 லட்சம் மதிப்பிலான தேங்காய், கொப்பரை ஆகியவை விற்பனையாயின.
வெள்ளகோவில்
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தினசரி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனா்.
இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 4.9 டன் தேங்காய், 3.7 டன் கொப்பரை ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் தேங்காய் கிலோ ரூ.17.65 முதல் ரூ. 22.70 வரையிலும், கொப்பரை கிலோ ரூ.59.00 முதல் ரூ.75.35 வரைக்கும் விற்பனையானது.
ஏலத்தில் மொத்தமாக ரூ.2.92 லட்சம் மதிப்பிலான தேங்காய், கொப்பரை ஆகியவை விற்பனையாயின.
Next Story






