search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.ஏ.பி., 3-ம் மண்டல பாசனத்திற்காக திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
    X

    கோப்புபடம்

    பி.ஏ.பி., 3-ம் மண்டல பாசனத்திற்காக திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

    • ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சுமாா் 1 லட்சம் ஏக்கா்களுக்கு முறைவைத்து தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
    • 7600 மில்லியின் கன அடி தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

    உடுமலை:

    உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி. திட்டத்தின் கீழ் 3ம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு பு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் கோவை, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 94 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    பிஏபி. பாசனத் திட்டத்தில் மொத்தம் உள்ள சுமாா் 4 லட்சம் ஏக்கா் நிலங்களுக்கு நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்துக்குத் தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சுமாா் 1 லட்சம் ஏக்கா்களுக்கு முறைவைத்து தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

    இந்நிலையில் 3ம் மண்டல பாசனத்துக்கு டிசம்பா் 28ல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணையில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிட நலத் துறை அமைச்சா் கயல்விழிசெல்வராஜ் ஆகியோா் அணையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தானியங்கி பொத்தானை அழுத்தி அணையில் இருந்து நீரை திறந்துவைத்தனா்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் எஸ்.வீனீத், பொதுப் பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    நீா் திறப்பின் மூலம் பொள்ளாச்சி வட்டத்தில் 19,781 ஏக்கா், சூலூா் வட்டத்தில் 3020 ஏக்கா், உடுமலை வட்டத்தில் 13,428 ஏக்கா், மடத்துக்குளம் வட்டத்தில் 6,763 ஏக்கா், தாராபுரம் வட்டத்தில் 18,963 ஏக்கா், பல்லடம் வட்டத்தில் 17,465 ஏக்கா், திருப்பூா் வட்டத்தில் 7,266 ஏக்கா், காங்கயம் வட்டத்தில் 7,676 ஏக்கா் என ஆக மொத்தம் 94 ஆயிரத்து 362 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். தண்ணீா் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

    இது குறித்து பொதுப் பணித் துறையினா் கூறுகையில்,

    பரம்பிக்குளம் ஆழியாறு பிரதான கால்வாயில் இருந்து முதல்கட்டமாக 250 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு ள்ளது. இது படிப்படியாக 912 கன அடியாக உயா்த்தப்படும். டிசம்பா் 28 முதல் 2023 ஏப்ரல் 27 வரை 120 நாள்களுக்கு உரிய இடைவெளிவிட்டு மொத்தம் 4 சுற்றுகளாக 7600 மில்லியின் கன அடி தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

    Next Story
    ×