என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஜாப் ஒர்க் கட்டணத்தை வழங்க மறுப்பு - ஏற்றுமதி நிறுவனம் மீது பிரின்டிங் நிறுவனம் வழக்கு
  X

  கோப்புபடம்

  ஜாப் ஒர்க் கட்டணத்தை வழங்க மறுப்பு - ஏற்றுமதி நிறுவனம் மீது பிரின்டிங் நிறுவனம் வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரின்டிங் நிறுவனம் துணியில் பிரின்டிங் செய்துகொடுத்துள்ளது.
  • பிரின்டிங் கட்டணம் மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  திருப்பூர் :

  திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள ஒரு ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனம் கருவம்பாளையம் பிரின்டிங் நிறுவனத்துக்கு ஜாப்ஒர்க் ஆர்டர் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் பிரின்டிங் நிறுவனம் துணியில் பிரின்டிங் செய்துகொடுத்துள்ளது.இந்நிலையில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள கட்டண தொகையை வழங்க மறுப்பதாக ஏற்றுமதி நிறுவனம் மீது, பிரின்டிங் நிறுவனம் ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் புகார் அளித்துள்ளது.

  இதுகுறித்து ஆர்பிட்ரேசன் தலைவர் கருணாநிதி கூறியதாவது:-

  பிரின்டிங் கட்டணம் மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எவ்வித விவரமும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை என கூறி, ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் மீத தொகை ஒரு லட்சம் ரூபாயை வழங்க மறுப்பதாக பிரின்டிங் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.இது ஒரு புதுமையான மற்றும் சிக்கல் நிறைந்த வழக்கு. ஆவணங்களை தணிக்கை செய்து, விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். மேலாளர்கள் நிர்ணயிக்கும் ஜாப் ஒர்க் கட்டண விவரங்கள் குறித்து ஆடை உற்பத்தி, ஜாப்ஒர்க் நிறுவன உரிமையாளர்கள் தவறாமல் தெரிந்துவைத்திருக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

  Next Story
  ×