என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
தாராபுரத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் - சிறுமி-2 ஆசிரியைகள் பாதிப்பு
- பழைய குடியிருப்பு பகுதியில் 2 ஆசிரியைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- நகராட்சி ஆணையர் மற்றும் நகர் மன்ற தலைவர் துரிதமாக செயல்பட்டு கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. தற்போது தாராபுரம் நகராட்சி முழுவதும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது . இந்தநிலையில் 14வது வார்டு பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பழைய குடியிருப்பு பகுதியில் 2 ஆசிரியைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து 14வது வார்டு பகுதி மக்கள் கூறுகையில்:-
தாராபுரம் 14-வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக குப்பைகள் மற்றும் கழிவுநீர்களை அகற்றாமல் இருந்த காரணத்தினால் தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. ஆகவே நகராட்சி ஆணையர் மற்றும் நகர் மன்ற தலைவர் துரிதமாக செயல்பட்டு கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சமூக ஆர்வலர்களை ஒன்று திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்றனர்.






