என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
கோவில் நிலங்களை பாதுகாக்காவிட்டால் போராட்டம் - இந்து முன்னணி அறிவிப்பு
- 3 மாதங்களுக்கு முன் நீலகிரி மக்களவை உறுப்பினரை வரவழைத்து 60 சென்ட் கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடைபெற்றது.
- கோவில் நிலங்களை சமூக விரோதிகள் சிலா் தொடா்ந்து ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனா்.
திருப்பூா்:
தி.மு.க. ஆட்சியில் கோவில்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகாத சுவாமி கோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே சமூக விரோதிகள் சிலா் கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனா். கடந்த 3 மாதங்களுக்கு முன் நீலகிரி மக்களவை உறுப்பினரை வரவழைத்து 60 சென்ட் கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடைபெற்றது.
இந்து முன்னணி மற்றும் பக்தா்களின் போராட்டத்தால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது. இதனிடையே கோவில் முன் அமைந்துள்ள மயில் வாகனத்துக்கு அருகில் உள்ள கோவில் நிலங்களை சமூக விரோதிகள் சிலா் தொடா்ந்து ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனா். கோவில் நிலத்தில் அத்துமீறி நுழைந்து சாக்கடை கால்வாய் வெட்டியுள்ளதுடன், சாக்கடை நீரை தேக்கி கோபுரம் சேதம் அடையும் வரையில் செயல்பட்டு வருகின்றனா்.
இதுதொடா்பாக புகாா் அளித்தும் காவல் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவி ல்லை. தமிழகத்தில் கோவில்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தொடா்கிறது. திருமுருகநாத சுவாமி கோவிலின் நிலங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களைத் திரட்டி கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்த வேண்டியது வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






