என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை - பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., வழங்கினார்
    X

    பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.   

    அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை - பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., வழங்கினார்

    • திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது.
    • சென்னையில் நாளை மறுதினம் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் எவ்வாறு கலந்து கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சென்னையில் நாளை மறுதினம் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் எவ்வாறு கலந்து கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் இணைச்செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன் , அன்பகம் திருப்பதி, கருணாகரன், ஹரிஹரன், திலகர் நகர் சுப்பு, கண்ணன், பாலசுப்பிரமணியம், குமார் மற்றும் தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான் மற்றும் நிர்வாகிகள் ஆண்டவர் பழனிச்சாமி, வக்கீல் அணி செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×