search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்காடு-ஈரோடு பயணிகள் ரெயில் சேவை நாளை முதல் தொடங்குகிறது
    X

    கோப்புபடம்.

    பாலக்காடு-ஈரோடு பயணிகள் ரெயில் சேவை நாளை முதல் தொடங்குகிறது

    • பாலக்காடு டவுன்-ஈரோடு ரெயில் வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்கள் இயக்கப்படும்.
    • ஈரோடு-கோவை முன்பதிவில்லா தினசரி ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    பாலக்காடு டவுன்-ஈரோடு செல்லும் முன்பதிவில்லா ரெயில் (எண்.06818) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்கள் இயக்கப்படும். இந்த ரெயில் தினமும் பாலக்காடு டவுனில் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டுக்கு இரவு 7.10 மணிக்கு சென்றடையும். கோவைக்கு 4.17 மணிக்கும், வடகோவைக்கு 4.27 மணிக்கும், பீளமேடுக்கு 4.37 மணிக்கும், சிங்காநல்லூருக்கு 4.42 மணிக்கும், இருகூருக்கு 4.49 மணிக்கும், சூலூருக்கு 4.57 மணிக்கும், சோமனூருக்கு 5.09 மணிக்கும், வஞ்சிப்பாளையத்துக்கு 5.19 மணிக்கும், திருப்பூருக்கு 5.29 மணிக்கும், ஊத்துக்குளிக்கு 5.49 மணிக்கும், ஈரோடுக்கு 7.10 மணிக்கும் சென்றடையும்.

    இதுபோல் ஈரோடு-பாலக்காடு டவுன் முன்பதிவில்லா ரெயில் (எண்.06819) வருகிற 30-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தினமும் ஈரோட்டில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு டவுனை காலை 11.45 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் ஊத்துக்குளிக்கு காலை 7.59 மணிக்கும், திருப்பூருக்கு 8.13 மணிக்கும், வஞ்சிப்பாளையத்துக்கு 8.24 மணிக்கும், சோமனூருக்கு 8.34 மணிக்கும், சூலூருக்கு 8.44 மணிக்கும், இருகூருக்கு 8.51 மணிக்கும், சிங்காநல்லூருக்கு 8.56 மணிக்கும், பீளமேடுக்கு 9.04 மணிக்கும், வடகோவைக்கு 9.14 மணிக்கும், கோவைக்கு 9.30 மணிக்கும் சென்றடையும்.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு-கோவை முன்பதிவில்லா தினசரி ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. ஈரோட்டில் தினமும் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு காலை 9.45 மணிக்கு சென்றடைந்தது. இந்தநிலையில் ஈரோட்டில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு 10.15 மணிக்கு சென்றடையும் வகையில் நேர மாற்றம் செய்யப்பட்டு, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது.

    ஈரோட்டில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு ஊத்துக்குளிக்கு 8.35 மணிக்கும், திருப்பூருக்கு 8.49 மணிக்கும், வஞ்சிப்பாளையத்துக்கு 8.59 மணிக்கும், சோமனூருக்கு 9.09 மணிக்கும், சூலூருக்கு 9.19 மணிக்கும், இருகூருக்கு 9.27 மணிக்கும், சிங்காநல்லூருக்கு 9.34 மணிக்கும், பீளமேடுக்கு 9.41 மணிக்கும், வடகோவைக்கு 9.49 மணிக்கும், கோவைக்கு 10.15 மணிக்கும் சென்று சேரும்.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×