search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் குழாய் உடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய உத்தரவு
    X

    கோப்புபடம்.

    குடிநீர் குழாய் உடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய உத்தரவு

    • 4வது குடிநீர் திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
    • நீரேற்று நிலையங்கள் தயார்படுத்தும் பணி ஆகியன பெருமளவு நிறைவடைந்துள்ளது.

    திருப்பூர :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் 4வது குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.இதில் மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து குடிநீர் கொண்டு வந்து வினியோகிக்கும், 4வது குடிநீர் திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.பிரதான குழாய்கள் பதிப்பு பணி, சுத்திகரிப்பு மையம் மற்றும் நீரேற்று நிலையங்கள் தயார்படுத்தும் பணி ஆகியன பெருமளவு நிறைவடைந்துள்ளது.இப்பணிகள் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தனர். தற்போதுள்ள பணிகள் நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.மேலும் 4வது குடிநீர் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை விரைவுபடுத்தி வருகிற 15-ந் தேதி வெள்ளோட்டம் நடத்தும் வகையில் செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.மேலும் பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய்கள் பதிப்பு பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். இப்பணியின் போது ஏற்படும் குடிநீர் குழாய் உடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.தெரு விளக்குகள் புதிதாக பொருத்துதல், பழுதான விளக்குகள் உடனுக்குடன் மாற்றுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×