என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
திருப்பூர் ரவுடி கொலையில் மேலும் ஒரு வாலிபர் கைது

- ‘யார் பெரிய ரவுடி’ என்ற முன்விரோத மோதல் உள்ளன.
- சந்திராபுரத்தில் உள்ள மதுக்கடையில் மது அருந்தினர்.
திருப்பூர் :
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு ஜெய் நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 30), பெயிண்டர். இவர் மீது கொலை முயற்சி, அடி தடி, வழிப்பறி என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவருக்கும் ராஜேஷ் என்பவருக்குமிடையே 'யார் பெரிய ரவுடி' என்ற முன்விரோத மோதல் உள்ளன. இதன் காரணமாக தினேஷ்குமாரை கொல்ல ராஜேஷ் திட்டமிட்டார். சம்பவத்தன்று ராஜேஷ், தினேஷ்குமார் உட்பட 10 பேர் கொண்ட கும்பல் சந்திராபுரத்தில் உள்ள மதுக்கடையில் மது அருந்தினர். அப்போது ராஜேஷ், தினேஷ்குமாரிடையே பிரச்சினை எழுந்தது. உடன் வந்த நண்பர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து முன்விரோதம் தொடர்பாக சமாதான பேச்சு நடத்தலாம் என கூறி தினேஷ்குமாரை கே.என்.பி., சுப்ரமணியம் நகருக்கு அழைத்து சென்றனர்.
காட்டுப்பகுதிக்குள் சென்ற போது மீண்டும் இருவருக்குமிடையே தகராறு எழுந்தது. இதில் ராஜேஷ் உட்பட 10 பேரும் தினேஷ்குமாரின் கை, கால்களை அமுக்கி பிடித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன், (28), கண்ணன் (25), தினேஷ் (26), பாலாஜி சரவணன் (28), தமிழரசன், (25), பாலகிருஷ்ணன், (25) என 6 பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 3 ேமாட்டார் சைக்கிள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜேஷ், ராம்குமார் உட்பட 4 பேரை போலீசார் தேடி வந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து வெளியூர் தப்பி செல்ல முயன்ற முக்கிய குற்றவாளி ராஜேஷை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ராஜேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் 6பேர் மீது கஞ்சா, கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்கு உள்ளன. 6 பேரில் பாலாஜி சரவணன், மணிகண்டன் மற்றும் தலைமறைவாக உள்ள ராம்குமார் ஆகியோர் மீது கடந்த, 2022 திருப்பூர் எம்.பி., நகர் காட்டு பகுதியில் சதீஷ் என்ற வாலிபரை கொடூரமாக கொலை செய்து, தலையை துண்டித்த வழக்கு உள்ளது. இந்தநிலையில் தலைமறைவாக இருந்த ராம்குமாரை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
