என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டச்சத்து விழிப்புணர்வு நடைபெற்றக் காட்சி.
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
- திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் 6-ம் நாள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
- போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2, தமிழ்நாடு உணவுத்துறை மற்றும் மாவட்ட ஊரக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் மற்றும் தெற்கு காவல் நிலையம் சார்பில் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் 6-ம் நாள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவேல், காவல் ஆய்வாளர் சிவசங்கரி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
உணவு பாதுகாப்பு அலுவலர் பேசுகையில்:- போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. காய்கறிகள், கீரைகள், போன்ற உணவுகளில் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளது.அன்று உணவே மருந்து இன்று மருந்தே உணவாயிற்று. சிறுதானியங்களில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்றவை அடங்கி உள்ளது என்று பேசினார். அங்கன்வாடி பணியாளர் ஹேமலதா கலந்து கொண்டார்.
மாணவச் செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, காமராஜ், செர்லின், தினேஷ்கண்ணன், சபரிவாசன், விஜய், பூபதி ராஜா ஆகியோர் தலைமையில் 60க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஊட்டச்சத்து உணவுகளை அனைவரும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.






