என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நொய்யல் தண்ணீரை சுத்திகரித்து மீண்டும் ஆற்றில் விட வேண்டும் - நீர் மேலாண்மை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை
    X

    கோப்புபடம்.

    நொய்யல் தண்ணீரை சுத்திகரித்து மீண்டும் ஆற்றில் விட வேண்டும் - நீர் மேலாண்மை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

    • 100 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய குட்டை, தண்ணீர் வரத்தின்றி வறண்டு கிடக்கிறது.
    • ராஜவாய்க்காலில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் உள்ள குட்டைக்கு எளிதாக தண்ணீர் கொண்டு செல்ல முடியும்.

    திருப்பூர் :

    கோவையில் இருந்து கழிவுநீர் கலப்பதால் நொய்யல் தண்ணீரை சுத்திகரித்து மீண்டும் ஆற்றில் விட வேண்டுமென நீர் மேலாண்மை பாதுகாப்பு சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நொய்யல் ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு, சாமளாபுரம் பேரூராட்சி கள்ளப்பாளையத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய குட்டை, தண்ணீர் வரத்தின்றி வறண்டு கிடக்கிறது. சாமளாபுரம் குளத்துக்கு செல்லும் ராஜவாய்க்காலில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் உள்ள குட்டைக்கு எளிதாக தண்ணீர் கொண்டு செல்ல முடியும். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை மாவட்ட பகுதியில் இருந்து வரும் கழிவுநீர், நொய்யலில் நேரடியாக கலப்பதால் ஆற்றை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.நொய்யல் ஆற்று தண்ணீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் ஆற்றில்விட ஆவன செய்ய வேண்டும்.அவ்வாறு செய்வதால் விவசாயிகள், கால்நடைகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும்.

    நிலத்தடி நீர் மாசுபாடும் தவிர்க்கப்படும். சாமளாபுரம் குளத்தில் மீன் பிடிக்கும் செயலால் பல்வேறு வகையில் நீர் வளம் பாதிக்கப்படுகிறது. ஒரே நபர் தொடர்ந்து மீன் பிடி ஏலம் எடுத்து நடத்தி வருகிறார்.மீன்களுக்கு, ரசாயனம் கலந்த உணவு தண்ணீர் வீசப்படுவதால் குளத்து நீர் மாசுபடுகிறது. மாவட்ட நிர்வாகம் முறைகேடாக மீன் வளர்ப்பை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×