search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியில் களை கட்டிய கலைத்திருவிழா
    X
    மாணவர்களின் ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்ற காட்சி. 

    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியில் களை கட்டிய கலைத்திருவிழா

    • சிறப்பு விருந்தினர் பெரியசாமி டெக்ஸ்டைல் துறையின் அதிநவீன கோட்பாடுகளை பற்றி விளக்கினார்.
    • விழாவின் இறுதி நிகழ்வாக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள நிப்ட்-டீ பின்னலாடைக் கல்லூரியில் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையே "இக்னீஷியா " என்னும் தலைப்பில் கடந்த 10 ஆண்டுகளாக கலைப்போட்டிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் 2 நாட்களாக நடைப்பெற்றது.

    முதல் நாள் விழாவினை அடல் இன்குபேஷன் சென்டர்(ஏஐசி ) முதன்மை செயல் அலுவலர் பெரியசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஏ.எப்.டி. துறைத் தலைவர் அருந்ததி கோஷல் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினர் பெரியசாமி டெக்ஸ்டைல் துறையின் அதிநவீன கோட்பாடுகளை பற்றி விளக்கினார். ஜி.டி.பி. துறைத் தலைவர் ஜெயந்தி நன்றி கூறினார். முக ஓவியம் ( பேஸ் பெயிண்டிங்), சுவரொட்டி விளக்கக்காட்சி (போஸ்டர் பிரசன்டேஷன்), சிகை அலங்காரம் (ஹேர் டு) , காய்,பழங்களில் அலங்காரம் செய்தல் (வெஜிடபிள் ப்ரூட் கார்விங்), படத்தொகுப்பு (கொலாஜ் வொர்க்), வரைதல் திறன் (ஸ்கெட்சிங்), புகைப்படக்கலை (போட்டோகிராபி), மின்னணுக்கழிவுகளில் புதிய கண்டுபிடிப்பு என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    2-வது நாள் தனி நபர் நடனம் , குழு நடனம் , மெய்ப்பாடு , ஆடை அலங்கார அணிவகுப்பு ( சிறந்த வடிவமைப்பாளர் ,அதிகபட்சப் பொருத்தம் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    இதில் பல மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து 1200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ , மாணவிகள் கலந்து கொண்டு மேடையில் தங்களின் அபரிமிதமான கலைத்திறமைகளை வெளிக்காட்டி காண்பவர்களை கவர்ந்தனர்.மாணவர்களின் மூன்று ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. அனுராக் மண்டல் நடுவராக இருந்தார். விழாவின் இறுதி நிகழ்வாக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    கல்லூரியின் முதன்மை ஆலோசகர் ராஜா எம்.சண்முகம் தலைமை தாங்கினார்.கல்லூரி தலைவர் மோகன்,கல்லூரி துணைத்தலைவர்கள் பழனிச்சாமி , ரங்கசாமி, பொதுச்செயலாளர் விஜயகுமார், இணைச்செயலாளர் சீனிவாசன்,நிர்வாக குழு உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் கோப்பையை திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி பெற்றது.போட்டிகளில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    Next Story
    ×