search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஏழுமலையான் கோவில் வனப்பகுதியில் குப்பைகளை சேகரித்த தன்னார்வலர்கள்
    X

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஏழுமலையான் கோவில் வனப்பகுதியில் குப்பைகளை சேகரித்த தன்னார்வலர்கள்

    • வனப்பகுதிக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும்.
    • கோவிலுக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் உணவுடன் கூடிய பிளாஸ்டிக் பைகள், தண்ணீருடன் கூடிய பாட்டில்களை வனப்பகுதிக்குள் வீசி செல்வதாக தெரிகிறது.

    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரக பகுதியில் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. கோவிலானது அடர்ந்த வனப் பகுதியில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமை மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கோவிலுக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் உணவுடன் கூடிய பிளாஸ்டிக் பைகள், தண்ணீருடன் கூடிய பாட்டில்களை வனப்பகுதிக்குள் வீசி செல்வதாக தெரிகிறது.

    இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:- வறட்சி நிலவி வருகின்ற தற்போதைய சூழலில் உணவு தண்ணீரைத் தேடிக் கொண்டு ஏராளமான வனவிலங்குகள் அடிவாரப் பகுதியில் முகாமிட்டு உள்ளது.அப்போது அவை வனப்பகுதியில் வீசப்பட்டுள்ள உணவுடன் கூடிய பிளாஸ்டிக் பைகளை தின்று விடுகின்றது. இதனால் வனவிலங்குகள் படிப்படியாக உடல் ஆரோக்கியத்தை இழந்து பரிதாபமாக உயிரிழந்தும் வருகின்றன. அதன் இறப்பின் காரணத்தை கண்டறிவதற்காக பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் போது வயிற்றுப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.எனவே வனப்பகுதிக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும். வனத்துறையினரும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து வனப்பகுதியில் மக்கள் வீசி சென்ற பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×