என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்த காட்சி.
மடத்துக்குளம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து
- எந்திரத்தில் இருந்து வந்த தீப்பொறி தென்னை நார்கள் மீது விழுந்து தீ பிடித்தது.
- பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தென்னை நார்கள் எரிந்து நாசம் ஆனது.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள மடத்துக்குளம் வட்டத்துக்குட்பட்ட சங்கராமநல்லூரில் ஆண்டிபட்டி ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எந்திரத்தில் இருந்து வந்த தீப்பொறி தென்னை நார்கள் மீது விழுந்து தீ பிடித்தது. இதன் காரணமாக உலர் களத்தில் காய வைக்கப்பட்டு இருந்த தென்னை நார்கள் தீப்பிடித்து எரிந்தது. இதனை தொடர்ந்து உடுமலை தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த பல மணி நேரம் போராடினர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தென்னை நார்கள் எரிந்து நாசம் ஆனது. மேலும் உற்பத்தி செய்து குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த தென்னை நார்களும் எரிந்து சாம்பலானது .






