search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தூர் பகுதியில் 7 மையங்களில் கொரோனா  தடுப்பூசி முகாம்   18-ந்‌ தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    முத்தூர் பகுதியில் 7 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் 18-ந்‌ தேதி நடக்கிறது

    • முத்தூர் கடைவீதி,வரட்டுக்கரை ஆகிய அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 7 மையங்களில் நாளை மறுநாள் 18-ந் தேதி நடைபெறுகிறது.
    • பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின், கோர்பவேக்ஸ் தடுப்பூசி ஆகியவற்றினை இலவசமாக போடுகின்றனர்.

    காங்கயம்:

    முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் முத்தூர் அரசு மருத்துவமனை வளாகம், மேட்டாங்காட்டுவலசு, மேட்டுப்பாளையம், ஊடையம், வீரசோழபுரம் ஆகிய துணை சுகாதார நிலையங்கள், முத்தூர் கடைவீதி,வரட்டுக்கரை ஆகிய அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 7 மையங்களில் நாளை மறுநாள் 18-ந் தேதி நடைபெறுகிறது.

    முகாமில் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள், பணியாளர்கள், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் கலந்து கொண்டு வருகிற 18- ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 12 வயதுக்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள், இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நகர, சுற்று வட்டார கிராம பொதுமக்களுக்கு முதல், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின், கோர்பவேக்ஸ் தடுப்பூசி ஆகியவற்றினை இலவசமாக போடுகின்றனர்.

    Next Story
    ×