என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்ற காட்சி.
இலவச கண் சிகிச்சை முகாம்
- பல்லடம் அரசு மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார்.
- ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பன் தலைமை வகித்தார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பன் தலைமை வகித்தார். பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி, முன்னிலை வகித்தார். பல்லடம் அரசு மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 9 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கண் சிகிச்சை முகாமில் ஊராட்சி துணைத் தலைவர் செல்லத்துரை, ஊராட்சி செயலாளர். நேரு , மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






