search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலை உணவு திட்டம் கலெக்டர் அதிரடி உத்தரவு
    X

    கோப்புபடம். 

    காலை உணவு திட்டம் கலெக்டர் அதிரடி உத்தரவு

    • தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைத்தார்.
    • அடுத்த மாதம் 15ந் தேதி முதல் அவிநாசி, பல்லடம், திருப்பூர், மூலனூர், காங்கயம் ஆகிய வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

    தாராபுரம்:

    தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் வாயிலாக 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு உட்பட 76 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் வழங்க திட்டமிடப்பட்டு, இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டு முதல் கட்டமாக குடிமங்கலம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், பொங்கலுார், ஊத்துக்குளி, வெள்ளக்கோவில் வட்டாரங்களில் உள்ள பள்ளிகளில் இம்மாதம் அதாவது பள்ளிகள் துவங்கிய நாளில் இருந்து செயல்படுத்தப்பட உள்ளது.

    அடுத்த மாதம் 15ந் தேதி முதல் அவிநாசி, பல்லடம், திருப்பூர், மூலனூர், காங்கயம் ஆகிய வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.காலை சிற்றுண்டி வழங்குவதற்கு மாணவ, மாணவிகளுக்கு தேவையான தட்டு, டம்ளர், சமையல் செய்ய பாத்திரங்கள் மற்றும் டிரங்க் பெட்டி உள்ளிட்டவற்றை அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர்கள் வாயிலாக அந்த பொருட்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய அந்தந்த வட்டார பி.டி.ஓ.,க்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.

    Next Story
    ×