என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரும், சரக்கு வேனும் மோதி கிடப்பதை படத்தில் காணலாம்.
பல்லடம் அருகே அவிநாசிப்பாளையத்தில் கார் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலி
- கோவை கணபதியைச் சேர்ந்த ரங்கசாமி (வயது 63) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- அவிநாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள அவிநாசி பாளையம், சுங்கம் அருகே நேற்று இரவு கோவையிலிருந்து திருச்சி நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டூரிஸ்ட் காரின் மீது மோதியது. இதில் கோவை கணபதியைச் சேர்ந்த ரங்கசாமி (வயது 63) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சிலர் காயம் அடைந்தனர். இது குறித்து அவிநாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story






