search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தை தடுக்கும் கருவி - மின் இணைப்பில் பொருத்தி கொள்ள  வேண்டுகோள்
    X

    கோப்புபடம். 

    விபத்தை தடுக்கும் கருவி - மின் இணைப்பில் பொருத்தி கொள்ள வேண்டுகோள்

    • கடந்த நாட்களில் மழைக்காலங்களில் ஏற்பட்ட பலவித மின் விபத்துக்களை சுட்டிக்காட்டி மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
    • மின் இணைப்பில், இ.எல்.சி.டி., (எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்) எனப்படும் உபகரணம் ஏற்கனவே மின் இணைப்புகளில் பொருத்தப்பட்டு வருகிறது.

    அவினாசி:

    இடி, மின்னல், மழையின் போது ஏற்படும் மின்கசிவு மற்றும் மின் பழுது காரணமாக விபத்து நேரிடுகிறது. சில சமயங்களில் உயிரிழப்பும் கூட ஏற்படுகிறது. இதை தவிர்க்க அனைத்து மின்நுகர்வோரும் ஆர்.சி.டி., எனப்படும் உபகரணத்தை அவரவர் மின் இணைப்பில் பொருத்திக் கொண்டால் விபத்து தவிர்க்க முடியும் என தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட மின்வாரியத்தினர் கூறியதாவது:-

    மின் இணைப்பில், இ.எல்.சி.டி., (எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்) எனப்படும் உபகரணம் ஏற்கனவே மின் இணைப்புகளில் பொருத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே மின் கசிவு மற்றும் மின் பழுதால் மின் விபத்து நேரிடுவது தொடர்வதால் அந்த உபகரணத்தை காட்டிலும் கூடுதல் பலன் தரும் ஆர்.சி.டி., உபகரணம் பொருத்த மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    இந்த உபகரணத்தை மின் இணைப்பில் பொருத்திக் கொள்ளும் போது மின் கசிவு மற்றும் மின் பழுதின் போது மின்சாரம் பாய்ந்தால் உடனடியாக அந்த மின் இணைப்பு தாங்கிய மீட்டர் செயலிழக்கும் (டிரிப்). இதனால் காயம், உயிர் சேதம் ஏற்படாது.

    புதிதாக மின் இணைப்பு வாங்குவோர் உட்பட அனைவரும் கட்டாயம் ஆர்.சி.டி., உபகரணம் பொருத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். சந்தையில் ஒருமுனை இணைப்புக்கான ஆர்.சி.டி., உபகரணம் 800 முதல் 1,200 ரூபாய், மும்முனை மின் இணைப்புக்கான ஆர்.சி.டி., 2,500 முதல் 2,800 ரூபாய் வரை விற்கப்படுகிறது.இவ்வாறு மின்வாரியத்தினர் கூறினர்.கடந்த நாட்களில் மழைக்காலங்களில் ஏற்பட்ட பலவித மின் விபத்துக்களை சுட்டிக்காட்டி மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×