என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஊதியூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - இரவு பகலாக கண்காணிக்கும் வனத்துறை பணியாளர்கள்
  X

  சிறுத்தையை பிடிக்க கூண்டில் அடைக்கப்பட்டுள்ள ஆடு.

  ஊதியூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - இரவு பகலாக கண்காணிக்கும் வனத்துறை பணியாளர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கன்றுக்குட்டியை கடித்து இழுத்துச் சென்று கொன்று போட்டு விட்டு ஓடிவிட்டது.
  • சிறுத்தை நடமாட்டம் உள்ளது என எச்சரிக்கை பதாகைகளையும் வைத்தனர்.

  காங்கயம் :

  காங்கயம்- தாராபுரம் சாலையில் ஊதியூர் மலை உள்ளது. 13 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த மலையில் மான், நரி, காட்டுப்பன்றி, உடும்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த மலைப்பகுதியில் பதுங்கி உள்ள சிறுத்தை ஒன்று, அக்கம்பக்கத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடுகளை கடித்து இழுத்துச் சென்று விடுகிறது. கடந்த வாரம் தாயம்பாளையம் ரத்தினசாமி என்பவரது ஆட்டுப்பட்டியில் புகுந்த சிறுத்தை ஆட்டை கடித்து கொன்றது. அதன்பின்னர் ஊதியூர் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபம் அருகிலுள்ள தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாட்டையும், காசிலிங்கம்பாளையத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வீட்டின் முன்பு கட்டிப் போட்டிருந்த கன்றுக்குட்டியை கடித்து இழுத்துச் சென்று கொன்று போட்டு விட்டு ஓடிவிட்டது.

  இது பற்றிய தகவல் அறிந்ததும் காங்கயம் வனத்துறை அலுவலர் தனபால் தலைமையில் வனத்துறையினர் ஊதியூர் வந்து மலையடிவாரத்தில் ஆங்காங்கே சிறுத்தை நடமாட்டம் உள்ளது என எச்சரிக்கை பதாகை களையும் வைத்தனர். தொடர்ந்து 3 கூண்டுகள் வரவழைக்கப்பட்டு ஊதியூர் பகுதியில் வைக்கப்பட்டு, சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி வனத்துறை அலுவலர் தனபால் கூறும்போது, கூண்டுகளில் உயிருடன் ஆட்டுக்குட்டியை விட்டு அதன் மூலம் சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்து வருகிறோம். தொடர்ந்து டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக டிரோன் ஆப்ப ரேட்டர் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் சிறுத்தை நடமா ட்டத்தை கண்காணிக்கும் பணியும் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. 25 பணியாளர்களை கொண்டு 4 குழுக்களாக பிரிந்து இரவு பகல் என தீவிர ரோந்து பணியினை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

  Next Story
  ×