என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த எம்.எல்.ஏ., கோரிக்கை
- பாண்டியன் நகர் முதல் புஷ்பா தியேட்டர் பஸ் நிறுத்தம் வரை புதிய பாலம் அமைக்கும் பணியை விரைவில் துவங்க வேண்டும்.
- பெருமாநல்லூரில் புதிய உழவர் சந்தை அமைக்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் கே.என்.விஜயகுமார் கலெக்டர் வாயிலாக, முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் பாண்டியன் நகர் முதல் புஷ்பா தியேட்டர் பஸ் நிறுத்தம் வரை புதிய பாலம் அமைக்கும் பணியை விரைவில் துவங்க வேண்டும். பெருமாநல்லூரில் புதிய உழவர் சந்தை அமைக்க வேண்டும். பொங்குபாளையம் ஊராட்சி ஜி.என்., கிருஷ்ணா நகரில் புதிய சமுதாயக்கூடம் அமைத்து கொடுக்க வேண்டும்.
தெற்கு தொகுதிக்குள் அமைந்துள்ள திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தை இரண்டாக பிரித்து, வேலம்பாளையம், திருப்பூர் வடக்கு பிர்காக்களை கொண்ட புதிய தாலுகா அலுவலகம் ,நெருப்பெரிச்சல் பகுதியில் ஒரு அலுவலகம் அமைக்க வேண்டும்.புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ,பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதலாக வகுப்பறை கட்டிக்கொடுக்க வேண்டும். திருப்பூர் மருத்துவமனைக்கு, 30 கி.மீ., தூரம் சென்றுவர வேண்டியுள்ளது.எனவே பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.