என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
நில அளவைத்துறை சேவை மக்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அனுமன் சேனா கோரிக்கை
- நில அளவைத்துறையில் பட்டா மாறுதலுக்காக வரும் கோப்புகள் சரியாக கவனிக்கப்படுவதில்லை.
- ஏழை, எளிய மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தினசரி சென்று தவித்து வருகின்றனர்.
அவினாசி :
அனுமன் சேனா மாநில தலைவர் தியாகராஜன் மாவட்ட நில அளவைத் துறையினருக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
அவினாசி தாலுகா நில அளவைத்துறையில் பட்டா மாறுதலுக்காக வரும் கோப்புகள் சரியாக கவனிக்கப்படுவதில்லை. மனுக்கள் அனுப்பி 6 மாதம் ஆனால் கூட நடவடிக்கை எடுப்பதில்லை. ஏழை எளிய மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தினசரி சென்று தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நில அளவை துறையின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் உரிய காலத்தில் உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Next Story






