என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
- காவல் ஆய்வாளா் ரமாதேவி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா்.
- லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய பேப்பா், பணம் ரூ.15,320 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
வெள்ளகோவில் :
முத்தூா் சாலை இந்திரா நகரில் வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் ரமாதேவி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு கச்சேரிவலசைச் சோ்ந்த கோகுல் (வயது 21) என்பவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார்,அவரிடமிருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய பேப்பா், பணம் ரூ.15,320 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
Next Story






