என் மலர்
உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே மின் மயானத்தில் இரும்பு கூரை தகடுகள் திருட்டு
- கட்டுமானப் பொருட்கள் இருப்பு வைக்க இரும்பு கூரை தகடுகளால் அறை அமைக்கப்பட்டது.
- மின் மயான நிர்வாகம் சார்பில் பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் ரோட்டரி மின் மயான அறக்கட்டளை மூலம் மின் மயானம் கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்ததால் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் சிமெண்ட், மற்றும் கட்டுமானப் பொருட்கள் இருப்பு வைக்க இரும்பு கூரை தகடுகளால் அறை அமைக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக கட்டடப் பணிகள் நடைபெறாமல் இருந்ததால், இருப்பு அறையில் பொருட்கள் எதுவும் இல்லை.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் திட்டம் போட்டு இருப்பு அறையை சுற்றி மாட்டப்பட்டிருந்த இரும்பு கூரை தகடுகளை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து மின் மயான நிர்வாகம் சார்பில் பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருப்பு அறையின் இரும்பு கூரை தகடுகளை திருடிச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.