search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளின் ஆவணங்களை இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு
    X

    கோப்புபடம்.

    விவசாயிகளின் ஆவணங்களை இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு

    • விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கிரைன்ஸ் என்ற இணையதளம் மூலமாக அரசின் நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் வருவாய்த்துறை, வேளாண்மை, உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, வேளாண் பொறியியல் துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் விற்பனை, கால்நடை பராமரிப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, விதை சான்றளிப்பு, சர்க்கரை துறைகள் இணைக்கப்பட உள்ளது.

    விவசாயிகளின் விவரங்களை ஒற்றை சாளர முறையில் பதிவு செய்வதால் வெவ்வேறு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக ஆவணங்களை சமர்ப்பிக்காமல் எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவு செய்யலாம். விவசாயிகள் தங்களின் ஆதார் அடையாள அட்டை, செல்போன் எண், புகைப்படம், வங்கி கணக்கு விவரம், நிலவிவரங்களை தங்கள் கிராம நிர்வாக அலுவலகம், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் தொடர்பு கொண்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×