என் மலர்
உள்ளூர் செய்திகள்

நேர்காணலில் மண்டல தலைவர் இல.பத்மநாபன் பேசிய காட்சி.
தி.மு.க. தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்களுக்கு நேர்காணல்
- பேரூர் நிர்வாக பணி, சமூக வலைதளப்பிரிவு, மகளிர் பிரிவு ஆகிய பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.
- விருப்ப மனு நேரில் கொடுத்தவர்கள் நேர்காணலில் பங்கேற்றார்கள்.
திருப்பூர் :
தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாக பணி, சமூக வலைதளப்பிரிவு, மகளிர் பிரிவு ஆகிய பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் திருப்பூரில் உள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கில் நடைபெற்றது. நேர்காணல் நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் தலைமை தாங்கினார். மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தமிழ்மறை முன்னிலை வகித்தார்.
மேற்கண்ட பொறுப்புகளுக்கு விருப்ப மனு நேரில் கொடுத்தவர்களும், இணையவழி மூலமாக விண்ணப்பித்தவர்களும் நேர்காணலில் பங்கேற்றார்கள். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள், திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






