search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்மீட்டர் எரிப்பு சம்பவத்தில் விசாரணை தீவிரம்
    X

    கோப்பு படம்.

    மின்மீட்டர் எரிப்பு சம்பவத்தில் விசாரணை தீவிரம்

    • தனியார் தொழிற்சாலையில் மின்மீட்டரை எரித்து மின்கட்டண அளவீடு மோசடி நடைபெற்றது.
    • மின்வாரிய அதிகாரிகளிடம் 5 மணி நேரம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்றது.

    திருப்பூர்

    திருப்பூரில் தனியார் தொழிற்சாலையில் மின்மீட்டரை எரித்து மின்கட்டண அளவீடு மோசடி சம்பவம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் 5 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். அதன்பிறகு விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு புதிய அதிகாரி நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரியான கோவை தெற்கு மின்பகிர்மான வட்ட மின் அளவீடு ஆய்வக செயற்பொறியாளர் சிவக்குமார் திருப்பூர் குமார் நகர் மின்வாரிய அலுவலகத்தில் 2-வது கட்ட விசாரணையை தொடங்கினார். புகார் தெரிவிக்கப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் 5 மணி நேரம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்றது.

    தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச்செயலாளர் சரவணன், விசாரணை அதிகாரியிடம் புகார் மனு அளித்தார். முன்னதாக மின்மீட்டர் எரிக்கப்பட்ட, சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு விசாரணை அதிகாரி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    Next Story
    ×