search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடந்த மாதத்தில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி  ரூ.9,382 கோடிக்கு வர்த்தகம்
    X

    கோப்பு படம்.

    கடந்த மாதத்தில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.9,382 கோடிக்கு வர்த்தகம்

    • அன்னிய செலாவணியை இந்தியாவுக்கு ஈட்டிக்கொடுப்பதில் திருப்பூருக்கு முக்கிய பங்கு உண்டு.
    • கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் 4.42 சதவீதம் குறைந்துள்ளது.

    திருப்பூர், செப்.17-

    திருப்பூரில் இருந்து பின்னலாடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அன்னிய செலாவணியை இந்தியாவுக்கு ஈட்டிக்கொடுப்பதில் திருப்பூருக்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு மாதம் அகில இந்திய அளவில் நடந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி விவரங்கள் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆகஸ்டு மாதத்துக்கான அகில இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.9 ஆயிரத்து 382 கோடியே 45 லட்சத்துக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.9 ஆயிரத்து 815 கோடியே 91 லட்சத்துக்கு நடந்துள்ளது.

    கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் 4.42 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.55 ஆயிரத்து 463 கோடியே 57 லட்சத்திற்கு நடந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை ரூ.49 ஆயிரத்து 133 கோடியே 96 லட்சத்துக்கு நடந்துள்ளது.

    இது கடந்த ஆண்டை விட 11.41 சதவீதம் குறைவாகும்.

    Next Story
    ×