என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருட்டு நடந்த கோவிலை படத்தில் காணலாம்.
பல்லடம் கோவிலில் துணிகர கொள்ளை
- ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவிலை சுத்தம் செய்ய பூசாரி சென்றதாக கூறப்படுகிறது.
- போலீசார் அந்தப் பகுதியில் ஆய்வு செய்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு காமாட்சியம்மன், முருகன், கருப்பராயன், உள்ளிட்ட சாமி சிலைகள் உள்ளது. இந்த நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவிலை சுத்தம் செய்ய பூசாரி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கோவில் கதவு திறந்து கிடந்துள்ளது.
உள்ளே சென்று பார்த்த போது, கோவிலில் இருந்த 8 கிலோ எடை கொண்ட கோவில் மணி, மற்றும் முருகன் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த பித்தளை வேல் , மற்றும் கருப்பராயன் முன்பு இருந்த இரும்பு அரிவாள்கள் ஆகியவை திருடப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடம் சென்ற போலீசார் அந்தப் பகுதியில் ஆய்வு செய்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டப் பகலில் கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






