என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    காங்கயத்தில் ஒன்றிய, நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் -   பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    X

    காங்கயத்தில் ஒன்றிய, நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய இளைஞர்களை கட்சியில் இணைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
    • கூட்டத்தில் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    காங்கயம் :

    காங்கயம் - சென்னிமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கயம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைப்பது, இளைஞர் இளம்பெண்கள் பாசறை அமைப்பது, நாடாளுமன்ற தேர்தலில் கட்சி நிர்வாகிகளின் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும், புதிய இளைஞர்களை கட்சியில் இணைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இதே போல் காங்கயம் நகர அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் அ.தி.மு.க. நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை தாங்கினார். பொருளாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×