search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டடம், காங்கயத்தில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் - பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகோள்
    X

    கோப்புபடம்.

    குண்டடம், காங்கயத்தில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் - பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகோள்

    • குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காங்கயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
    • பல்நோக்கு ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குண்டடம், காங்கயத்தில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் வருகிற 24-ந் தேதி இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காங்கயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இணை இயக்குனர் நலப்பணிகள், துணை இயக்குனர் பொது சுகாதாரம், திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள்.

    இந்த முகாமில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தாலுகா அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் தேவையான மேல்சிகிச்சைகள் அளிக்கப்படும். எனவே பொதுமக்கள் தவறாமல் பங்கேற்கலாம். தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இந்த முகாமில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

    ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் சோதனை, முழு ரத்த பரிசோதனைகள், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட பல்நோக்கு ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது. சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.

    இந்த முகாமில் அனைத்து சிறப்பு மருத்துவ பிரிவுகளும், பங்கேற்கும் வகையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் பொறுப்பேற்று சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×