search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப தலைவராக பெண் பெயர் - ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய முடிவு
    X

    கோப்புபடம்.

    குடும்ப தலைவராக பெண் பெயர் - ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய முடிவு

    • 2 லட்சத்து 86 ஆயிரம் ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவராக பெண்கள் பெயர் இடம்பெறுவது அவசியம்.
    • திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகாவில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 583 ரேஷன் கார்டுகள் உள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் முன்னுரிமை பெற்ற 2 லட்சத்து 86 ஆயிரம் ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவராக பெண்கள் பெயர் இடம்பெறுவது அவசியம். அதற்காக பெண் பெயர்களில் மாற்றம் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகள் திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகாவில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 583 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதன் மூலமாக 21 லட்சத்து 83 ஆயிரத்து 449 பேர் ரேஷன் பொருட்களை பெற்று பயன் அடைந்து வருகிறார்கள். முன்னுரிமை பெற்ற ரேஷன் கார்டுகள் 2 லட்சத்து 50 ஆயிரத்து 769 கார்டுகள் உள்ளன. முன்னுரிமை இல்லாத கார்டுகள் 5 லட்சத்து 23 ஆயிரத்து 814 இருக்கிறது.

    மத்திய அரசின் உத்தரவுப்படி, முன்னுரிமை பெற்ற கார்டுகளில் பெண்களே குடும்ப தலைவராக இருக்க வேண்டும். தமிழகத்தில் பி.எச்.எச். என்ற முன்னுரிமை பெற்ற கார்டுகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஓய்.) கார்டுகளில் பெண் குடும்ப தலைவர் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி குடும்ப தலைவர் மாற்ற வேண்டிய கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

    திருப்பூர் மாவட்டத்தில் 1,135 ரேஷன் கடைகளிலும் முன்னுரிமை பெற்ற கார்டுகளில் பெண் குடும்ப தலைவர் மட்டுமே இருக்க வேண்டும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் முன்னுரிமை பெற்ற கார்டுகளில் குடும்ப தலைவராக பெண் இருக்கும் வகையில் திருத்தம் செய்யும் பணி நடக்கிறது. பி.எச்.எச். என்று கார்டு வைத்துள்ள குடும்பங்களில் தலைவராக பெண் இடம் பெற வேண்டும். ஆண்கள் தலைவராக இருந்தாலும் ரேஷன் கடைகளில், அந்த குடும்பத்தின் தலைவியாக உள்ள பெண் புகைப்படத்தை கொடுத்து மாற்றி அமைக்க வேண்டும். பி.எச்.எச். மற்றும் ஏ.ஏ.ஓய். கார்டுகள் என 2 லட்சத்து 86 ஆயிரம் கார்டுகளில் குடும்ப தலைவராக பெண் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் திட்டங்கள் அறிவிக்கும்போது பெண்கள் அதிகம் பயன் பெற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×