என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.
ஊத்துக்குளியில் விவசாயிகள் போராட்டம்
- மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் கொளந்தசாமி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
- காத்திருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் தாக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர்.
ஊத்துக்குளி:
தஞ்சை மாவட்டம், திருமண்டங்குடி திருஆரூராண் தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகள் கடந்த 300 நாட்களாக கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் தாக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் சங்க தலைவர்களை தாக்கிய தஞ்சை மாவட்ட காவல்துறையை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்குளி தாலுகா குழு சார்பில் ஊத்துக்குளி ஆர்.எஸ். பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் தாலுகா தலைவர் மணி என்ற சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் கொளந்தசாமி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் மணியன், சிஐடியு சங்க பொருளாளர் காமராஜ் உள்பட பல விவசாயிகள் கலந்து கொண்டனர்.முடிவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா பொருளாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.






