என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.
காங்கயம் அருகே விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நீடிப்பு
- கால்வாய் சீரமைப்பில் நீண்ட கால அடிப்படையில் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும்,
- பிஏபி., தொகுப்பணைகளின் காலாவதியான ஷட்டா், உபகரணங்களை உடனே மாற்ற வேண்டும்
காங்கயம்:
பிஏபி., பாசன பகுதிகளில் தண்ணீா் திருட்டை தடுக்க வேண்டும், மற்ற பகுதிகளில் சமச்சீா் பாசனம் உள்ளதைப்போல மடைக்கு 7 நாட்கள் என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும், சிதிலமடைந்த பகிா்மான, உபபகிா்மான வாய்க்கால் பராமரிப்புப் பணிகளை உடனே தொடங்க வேண்டும், பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சீரமைப்பில் நீண்ட கால அடிப்படையில் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும்,
பிஏபி., தொகுப்பணைகளின் காலாவதியான ஷட்டா், உபகரணங்களை உடனே மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கயம் அருகே, கரூா் சாலையில் உள்ள பகவதிபாளையம் பகுதியில் பிஏபி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கேயம்-வெள்ளக்கோவில்) நீா் பாதுகாப்பு சங்கம் சாா்பில், தொடா் பட்டினிப்போராட்டத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை தொடங்கினா். இன்று 6-வது நாளாக நாளாக போராட்டம் நீடிக்கிறது.






