என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
மல்ஷிங் ஷீட் அமைத்து விவசாயிகள் தக்காளி சாகுபடி
- கோடை காலத்தில், சாகுபடி பரப்பு அதிகரித்து அதிக வரத்து காரணமாக தக்காளிக்கு விலை கிடைக்காது.
- நிலப்போர்வை அமைப்பதால் செடிகளுக்கு அருகிலேயே சொட்டு நீர் பாசனம் வாயிலாக நீர் பாய்ச்சலாம்.
உடுமலை:
உடுமலை வட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு பிரதான காய்கறி சாகுபடியாக தக்காளி உள்ளது.ஒவ்வொரு சீசனிலும் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக இச்சாகுபடி மேற்கொள்ளப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தக்காளி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.வழக்கமாக கோடை காலத்தில், சாகுபடி பரப்பு அதிகரித்து அதிக வரத்து காரணமாக தக்காளிக்கு விலை கிடைக்காது. இந்தாண்டு மழை இல்லாதது வறட்சியான காற்று உள்ளிட்ட காரணங்களால் கோடை சீசனில் மகசூல் கைகொடுக்கவில்லை.
இதையடுத்து தென்மேற்கு பருவமழை துவங்கியதும், அடுத்த சீசனுக்கான நடவு பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர்.ஆனால் பருவமழை இதுவரை துவங்காமல் தாமதித்து வருவதால் கிணறு மற்றும் போர்வெல்களில் நீர்மட்டம் குறைந்துள்ளது.
எனவே குறைந்த தண்ணீரை பயன்படுத்தி நாற்று நடவு செய்யும் வகையில் நிலப்போர்வை எனப்படும் மல்ஷிங் ஷீட் அமைத்து தக்காளி நாற்று நடவு செய்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நிலப்போர்வை அமைப்பதால் செடிகளுக்கு அருகிலேயே சொட்டு நீர் பாசனம் வாயிலாக நீர் பாய்ச்சலாம். மழை தாமதித்து வருவதால் கிணறு மற்றும் போர்வெல்களில் கிடைக்கும் குறைந்த தண்ணீரை பயன்படுத்தியே சாகுபடியை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றனர்.






