search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்புக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி. குடிமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

    போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • போதை பொருள் தடுப்புக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • காவல்துறை துணை கண்காணிப்பாளர் போதை பொருள் பயன்பாட்டின் தீமை மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து பேசினார்.

    உடுமலை :

    உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்புக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலாளர் கே.ஆர்.கே. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆர்.தேன்மொழி வேல் கலந்துகொண்டு போதை பொருள் பயன்பாட்டின் தீமை மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து பேசினார்.உடுமலை போக்குவரத்து ஆய்வாளர் ஏ.வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் பள்ளித் தலைமை ஆசிரியை கே.டி. பூரணி நன்றி கூறினார்.

    போதை பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்தல் மற்றும் மனித சங்கிலி நிகழ்ச்சி குடிமங்கலம் போலீஸ் சார்பில் நடந்தது. நால்ரோடு பகுதியில், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மனிதச்சங்கிலி நடைபெற்றது.நீண்ட தூரத்திற்கு அணி வகுத்து நின்ற மாணவர்கள், போதை ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில், குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ.,க்கள் ஆனந்தகிருஷ்ணன், செந்தில்குமார், முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×