search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் உள்ள டாஸ்மாக் கடையை  அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
    X

    கோப்புபடம்

    இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

    • மதுக்கடையை அகற்றக் கோரி டாஸ்மாக் மேலாளா், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு அளித்தனா்.
    • மதுக்கடையால் பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் கொங்கு பிரதான சாலை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. குடியிருப்புகள் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தக் கடையால் பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா்.

    மதுக்கடையை அகற்றக் கோரி டாஸ்மாக் மாவட்ட மேலாளா், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு அளித்தனா். ஆனால், இதுவரை டாஸ்மாக் மதுக்கடை அகற்றப்படவில்லை. இந்நிலையில், மதுக்கடையை அகற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மண்டலக்குழு செயலாளா் வி.எஸ்.சசிகுமாா் தலைமை வகித்தாா்.

    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்றாவிட்டால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் தெரிவித்தனா்.

    இதில் மாநகராட்சி துணை மேயரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினருமான பாலசுப்பிரமணியம், மாநகா் மாவட்ட குழு செயலாளா் ரவிசந்திரன், ஏஐடியூசி., மாவட்டத்தலைவா் மோகன் மற்றும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா்.

    Next Story
    ×