என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மடத்துக்குளத்தில் நெசவாளர்களை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்
    X

    கோப்புபடம்

    மடத்துக்குளத்தில் நெசவாளர்களை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்

    • 60 வயது பூர்த்தியான நெசவாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
    • கொரோனா கால நிவாரணமாக நெசவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

    உடுமலை:

    கைத்தறி தொழிலையும் நெசவாளர்களையும் பாதுகாக்க வலியுறுத்தி கைத்தறி நெசவாளர் சங்கம் ஏஐடியூசி., சார்பில் மடத்துக்குளம் நால் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க பொறுப்பாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மலையாண்டிபட்டினம் சுப்பிரமணி, ஜெய்சங்கர் ,ரவிச்சந்திரன், சரவணன், பாப்பான்குளம் எம் ராமச்சந்திரன், டி. ராஜேந்திரன், செந்தில், பாரதி, ஜோத்தம்பட்டி ஜெயராமன் ,குணசேகரன், கணியூர் கோவிந்தராஜ் ,செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏஐடியுசி., நிர்வாகிகள் நடராஜன், மோகன், ரவி, பழனிச்சாமி, சௌந்தரராஜன், சுப்பிரமணியம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.இதில் கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெசவு செய்ய அனுமதிக்க கூடாது. 60 வயது பூர்த்தியான நெசவாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    கொரோனா கால நிவாரணமாக நெசவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். கைத்தறிக்கான மூலப்பொருள் விற்பனை கூடம் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×