என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க மேம்பாலம் கட்ட கோரிக்கை
    X

    கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க மேம்பாலம் கட்ட கோரிக்கை

    • பல்லடம் நகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும்.
    • பல்லடம் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் 23வது ஒன்றிய மாநாடு ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் இசாக், துணைச் செயலாளர் ரவி, மற்றும் கட்சி நிர்வாகிகள் மூர்த்தி, ஜீவா, கணேசன், ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் இந்த மாநாட்டில், பல்லடம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேம்பாலம் கட்ட வேண்டும். பல்லடம் நகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும். பல்லடம் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேன், மற்றும் ரத்த வங்கி, அமைக்க வேண்டும். நலிவடைந்து வரும் விசைத்தறி தொழிலை காப்பாற்ற மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×