என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்லடம் தாலுகா அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்படுவதை அதிகாரிகள் பார்வையிட்ட போது எடுத்த படம்.
பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பழுதடைந்த வாக்குப்பதிவு எந்திரங்கள்
- தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத்தேர்தல் நடைபெற்றது.
- வாக்குப்பதிவு எந்திரங்கள் பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பல்லடம் :
தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத்தேர்தல் நடைபெற்றது இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் பழுதடைந்த 68 மின்னனு எந்திரங்கள் மற்றும் 60 மின்னணு கட்டுப்பாட்டு எந்திரங்கள்( கண்ட்ரோல் யூனிட்), 206 வி.வி.பேட் ஆகியவை பழுதுநீக்கி சரி செய்வதற்காக பெங்களூரூவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், வட்டாட்சியர் நந்தகோபால், தேர்தல் வட்டாட்சியர் தங்கவேல் மற்றும் அனைத்து கட்சியினர் பார்வையிட்டனர்.