என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பஸ் நிலையத்திற்கு சுதந்திர போராட்ட தியாகிகள் பெயரை சூட்ட வேண்டும் மேயரிடம் கவுன்சிலர்கள் கோரிக்கை
    X

    அதிமுக கவுன்சிலர்கள் மேயரிடம் மனு வழங்கிய காட்சி

    புதிய பஸ் நிலையத்திற்கு சுதந்திர போராட்ட தியாகிகள் பெயரை சூட்ட வேண்டும் மேயரிடம் கவுன்சிலர்கள் கோரிக்கை

    • அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
    • சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவப்படுத்த வேண்டும்

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரிடம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் -கவுன்சிலர் அன்பகம் திருப்பதி தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் வடக்குப்பகுதியில் புதியதாக கட்டித் திறக்கப்பட உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு, சுதந்திரப் போராட்ட தியாகிகள் நினைவாக ஏற்கனவே பல மாமன்றக்கூட்டங்களில் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அதன் மீது பரிசீலனை செய்து சுதந்திரப் பேராட்டத் தியாகி தீரன் சின்னமலைக்கவுண்டர் பெயர் அல்லது தியாகி திருப்பூர் குமரன் பெயர் வைத்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவப்படுத்த வேண்டும். மேலும் திருப்பூரின் பெருவாரியான மக்களின் விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    தொடர்ந்து அன்பகம் திருப்பதி கூறுகையில்:- திருப்பூர் புதிய பஸ் நிலையத்திற்கு தியாகிகள் பெயரை சூட்டுவதன் மூலம் இளம் தலைமுறையினர் தியாகிகளின் வரலாறு குறித்து தெரிந்து கொள்வார்கள். எனவே அரசு கட்டிடங்கள், மாநகராட்சி கட்டிடங்கள் பஸ் நிலையங்கள் போன்றவற்றிற்கு தியாகிகள் பெயரை சூட்ட வேண்டும் என அ.தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார்.

    Next Story
    ×