என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
ஊத்துக்குளியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- பாஜக., அரசின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊத்துக்குளி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பையும், பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படும் ஒன்றிய பாஜக., அரசின் ஜனநாயக விரோதப் போக்கையும் கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜன் தலைமையில் ஊத்துக்குளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஊத்துக்குளி வட்டார தலைவர் சர்வேஸ்வரன், நகர தலைவர் வேலன், மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், பொது செயலாளர் ராஜ்குமார், செயலாளர்கள் ராஜாமாணிக்கம், பாரதி, செல்வபாரதி, மனோஜ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் இலக்கியச் செல்வன், ஐ.என்.டி.யு.சி. தலைவர் சுப்பிரமணி, பெருந்துறை வட்டார தலைவர் ராவுத்துக்குமார், செல்லமுத்து, ஜலாலுதீன், பழனிச்சாமி, தங்கராஜ், மாரன், வேணுகோபால், நடராஜ், கருப்புச்சாமி, மோகன்ராஜ், கொங்கு தீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






