என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    போராட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

    பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    பல்லடம்:

    மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையே நடைபெறும் மோதலால், பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதால் நாடெங்கும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டுகொள்ளாத, மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து,பல்லடம் கொசவம்பாளையம் பிரிவில் பல்லடம் நகர, வட்டார காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டாரத் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன், மாநில நிர்வாகி காட்டூர் வெங்கடாசலம், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் மணிராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் நரேஷ் குமார், மற்றும் நகர, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×