என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தாராபுரத்தில் சமுதாய வளைகாப்பு விழா
  X

  கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழாவை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நடத்தி வைத்த போது எடுத்தபடம்.

  தாராபுரத்தில் சமுதாய வளைகாப்பு விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 200 கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
  • அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி அறிவுரைகள் வழங்கினார்.

  தாராபுரம் :

  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் தாராபுரம் புறவழி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் 200 கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊரக வளர்ச்சி முகமையின் மாவட்ட திட்ட அலுவலர் மரகதம் தலைமை தாங்கினார்.ஆர்.டி.ஓ. குமரேசன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி. செந்தில்குமார், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன், தாசில்தார் ஜெகஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி அறிவுரைகள் வழங்கினார்.

  இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ராமர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கே.கே.ஜீவானந்தம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வனஜா, தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×