என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில்  கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
    X

    மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்.

    பல்லடத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்

    • பல்லடம் பஸ் நிலையம் முன்பாக சென்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்திட ஒன்றிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.முன்னதாக பல்லடம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு இருந்து பேரணி தொடங்கி பல்லடம் பஸ் நிலையம் முன்பாக சென்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதில் பிரதமர் மோடி,மற்றும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

    மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், பவித்ரா தேவி மற்றும் பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசிவம், பொங்கலூர் ஒன்றிய செயலாளர் பி. பாலன் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக வை.பழனிசாமி, கே .வி.சுப்பிரமணியம் வாலிபர் சங்கம் சார்பாக சி.முருகேஷ், சிவக்குமார், நாகேந்திரன் இந்திய மாணவர் சங்கம் சார்பாக பிரவீன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×